இலங்கையில் போலி நாணயதாள்களின் புழக்கம் அதிகரிப்பு


இலங்கையில் போலி  நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக நாணயத்தாள்களை கையாள்வதில் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், ஏனைய பல பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை பணத்தை மாற்றுவதற்கு நபர்கள் வரலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும் பண பரிவர்த்தனை செய்யும் போது ஏதேனும் பணத்தாளில் மாற்றம் இருந்தால் உடனடியாக தகவல்  தெரிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.