பொதுத் தீர்மானத்தின் போது அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு – சஜித்

நாட்டுக்கான சரியான பொதுவான தீர்மானங்களை எடுக்கும் போது நிபந்தனையற்ற விதத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நேற்று(13) இடம்பெற்ற நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.