பொது வேட்பாளர் தெரிவு! தமிழ்க் கட்சிகளிடையே தலைமைத்துவ பிளவு

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் ஒரு ஒருமித்த முடிவு எடுப்பதில் தமிழ் கட்சிகளிடையே பிளவுகள் அதிகரித்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் பல்வேறுவிதமான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.

இந் நிலையில் பொது வேட்பாளர் தொடர்பில் முக்கிய முடிவுகளை எனுக்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. (NewsCut.lk)எனினும் இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்த எந்த ஒரு அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஒரு சில பத்தி எழுத்தாளர்களுமே கலந்துகொண்டனர்.

இவ் விடயம் தொடர்பில் அன்றைய தினம்  நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வெளிநாட்டில் இருப்பதாகவும், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் சிறீதரன் வவுனியா மற்றும் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதால் பங்கேற்கமுடியாது என அறிவுத்ததாகவும், சுரேஷ் பிரம்மச்சந்திரன் வருவதாக கூறியதாகவும் பின்னர் வரவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னைய காலங்களில் அனைத்துக் கட்சி கூட்டங்களில் குறித்த கட்சியினுடைய தலைவர்கள்(NewsCut.lk)சமூகமளிக்காத விடத்து அவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்புகின்ற வழக்கம் பேணப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சி சார்பிலும் எந்தவொரு பிரதிநிதியும் கலந்து கொள்ளவில்லை.

பொது வேட்பாளர் தொடர்பில் பொதுவெளியில் அதிகம் பேசக்கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் விக்னேஸ்வரன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாதது பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ்பிரேமச்சந்திரணிடம் வினாவியபோது,

ஏற்கனவே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினுடைய தலைமையின் கீழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றது.(NewsCut.lk) அவ்விடயம் தொடர்பில் விக்னேஸ்வரனுடனும் கலந்துரையாடினோம். அனைவருடனும் இணைந்தே செயற்படுவோம், என்றார்.

எனவே பொது வேட்பாளர் விடயத்தை விக்னேஸ்வரன் தலைமையில் மேற்கொள்வதை விரும்பாது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினுடைய தலைமைத்துவத்தின் கீழ் தான் நடைபெறவேண்டும் என கூட்டணியினர் விரும்புகின்றனரா? அதனால் தான் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்தனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.