இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞ்சுகள் வெளியேறாமல் தடுப்பு அமைப்பு

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலைகள் அமைக்கும் பணிகள் நேற்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது குளத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அமைக்கப்பட்ட பாதுகாப்பு வலையினை மேலும் அதிகரித்தல், தொழில் சார் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை அமைச்சரிடம் மீனவர்கள் முன்வைத்தனர்.