சர்வதேச சந்தையில் காணப்படும் கேள்விக்கு அமைய ஏற்றுமதியை இலக்காக கொண்டு, புதிய இளநீர் வகைகளை செய்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் 85 இளநீர் உற்பத்தி கிராமங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் சிறுபோகத்தை அடிப்படையாக கொண்டு வறண்ட வலயத்தில் 15,000 ஏக்கரில் நிலக்கடலை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கூடிய விளைச்சலை தரக்கூடிய நிலக்கடலை விதைகளை பயன்படுத்த விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.






