இங்கு இரண்டு நாடுமில்லை, இரண்டு இராணுவமும் இல்லை – யாழ் கட்டளைத் தளபதி

இங்கே இரண்டு நாடுமில்லை இரண்டு நிர்வாகமும் இல்லை இரண்டு இராணுவ கட்டமைப்பு என்ற கதைக்கும் இடமுமில்லை. நாம் அனைவரும் இலங்கையர்கள்என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பானம் வரைகைதந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன்முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன், நல்லூர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டேன். இர்து மத குருவுடனான சந்திப்பில் மிகவும் ஆக்கபூர்வமான பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தேன்.

இராணுவத்தினரின் பிரதான நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். தற்போதய அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகளை மக்கள் நலன்கள்சார்ந்து மேற்கொள்ளவுள்ளனர்.

யாழ் மாவட்ட கட்டளை தலைமையகமானது எப்போதும் வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் அத்தோடு இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களை  செயற்படுத்தவும் தயாராக உள்ளது.

இலங்கையர் அனைவரும் ஒரு நாட்டவர்கள் தான் என்ற கொள்கைக்கு இணங்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வசித்து வருகிறோம். இங்கே இரண்டு நாடுமில்லை இரண்டு நிர்வாகமும் இல்லை இரண்டு இராணுவ கட்டமைப்பு என்ற கதைக்கும் இடமுமில்லை. நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் இங்கே பிரிவினை என்ற வார்த்தைக்கு இடமேயில்லை என்றார்.