ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சங்கு சின்னத்தை கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பாக சிவில் அமைப்புகளுடன் இணைந்து அரியநேத்திரனை தமிழ் பொது வேட்பாளராக களம் இறக்கியிருந்தது.
குறித்த சுயேச்சை குழுவுக்கு சங்கு சின்னமாக வழங்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் சட்டங்களின் பிரகாரம் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏழு நாட்களுக்குள் தமக்கான சின்னத்தை கோரி விண்ணப்பிக்க முடியும் என்ற ஒரு விதிமுறையின் கீழ் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதன் பிரகாரம், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





