வீட்டில் போட்டியிடுவதா? ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி செவ்வாய்கிழமை முடிவு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறியவர்கள் மீண்டும் இணைந்து இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக போட்டுயிட வருமாறு அழைப்பு விடுப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியோடு இணைந்து வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளது.