உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு நவம்பர் 14இற்கு பின்னர் – ஆணைக்குழு தகவல்

பொதுத் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர் இதுதொடர்பான பேச்சு வார்த்தைகளை மிக விரைவாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர். எம். ஏ. எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.