மன்னார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை தொடர்பாகவும், நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணையை விமர்சித்து முகநூலில் பதி விட்ட இளைஞரொருவரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மன்னார் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் மருத்துவர் அர்ச்சுனாவின் வழக்கு விசாரணைகள் குறித்தும், மன்னார் நீதிமன்றம், சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கு எதிராகவும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் எனமன்னார் சட்டத்தரணிகள் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் குறித்த இளைஞருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த இளைஞர் நீதிமன்றில் முன்னிலை ஆகாத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது குறித்த இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.





