லாப்ஸ் காஸ் நிறுவணத்தின் புதிய வாடிக்கையாளர் முகவர் சேவை ஆரம்பம்!

பிரபல லாப்ஸ் காஸ் நிறுவணமானது தமது வாடிக்கையாளர்கள் 1345 என்னும் இலக்கத்துக்கு அழைத்தவுடன் அதிகபட்சமாக 1மணி நேரத்துக்குள் எரிவாயு சிலிண்டரினை விநியோகம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

லாப்ஸ் காஸ் நிறுவனத்தின் முகவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்றது.

லாப்ஸ் காஸ் நிறுவனத்தின் 1345 என்கிற என்ற முகவர் தொலைபேசி இலக்கம் மூலமான விநியோக சேவையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது லாப்ஸ் காஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள், முகவர்கள், என பல தரப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

வாடிக்கையாளர்கள் 1345 என்னும் இலக்கத்துக்கு அழைத்து தமது முகவரி மற்றும் எரிவாயு சிலிண்டரின் நிறையை தெரிவிப்பதன் மூலம் அதிகபட்சமாக 1 மணி நேரத்துக்குள் பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.