BREAKING தமிழ் மக்கள் கூட்டணியினர் யாழில் வேட்புமனுத் தாக்கல்


தமிழ் மக்கள் கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ததனர்.

இன்று பிற்பகல் 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.