செம்மணி புதைகுழி புதிய ஆய்வுப் பகுதியிலும் மண்டையோடு அடையாளம்

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதியிலிருந்து இன்றையதினம் மண்டையோடு ஒன்று அடையாளம்காணப்பட்டுள்ளது.

நேற்றைய அகழ்வின்போது குறித்த பகுதியில் சிறுமியின் ஆடை ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது