யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரி, வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசியக் கல்வியற் கல்லூரி ஆகியவற்றை தனிமைப்படுத்தல் மையமாக மாற்ற இராணுவத்தினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கல்வியற் கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு கல்வி கற்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்ற ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.





