நாடு முடக்கப்படலாம் – இராணுவத் தளபதி எச்சரிக்கை

நாடு முடக்கப்படலாம் – இராணுவத் தளபதி எச்சரிக்கைகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்காத பட்சத்தில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டி ஏற்படும் என இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் சில பிரிவுகளில் ஊரடங்குச் சட்டமும் சில இடங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களும் அமுல்படுத்தப்பட்டது.

நாட்டு மக்கள் கொரோனா ஓழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் கொரோனா கொத்தனியை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை, தனிமைப்படுத்தல் சட்டத்தினை கொண்டுவரும் எண்ணம் இல்லை.

எனினும் ஒரு சில பகுதிகளில் இருந்து அதிகளவானவர்கள் கண்டுபிடிக்கப்படும் போது நாடு முடக்கப்படலாம், என்றார்.