கொரோனா தொற்றாளர் சென்ற சலூன், உணவகம், வியாபார நிலையம் என்பன மூடப்பட்டன

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகைதந்த கொரோனா தொற்றாளி யாழ் நகரின் பல்வேறு வியாபார நிலையங்களுக்கு நடமாடியுள்ள நிலையில் அவர் நடமாடிய வியார நிலையங்கள் 14 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த நபர் சென்றுவந்த யாழ்ப்பாணம் நல்லூர் வைமன் வீதியில் அமைந்துள்ள சிகை அலங்கரிப்பு நிலையம், கோவில் வீதியில் உள்ள உணவகம், யாழ் நகரில் குறித்து கொரோனா தொற்றாளிக்கு சொந்தமான மூன்று அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன.

மேலும் குறித்த தொற்றாளரை ஏற்றிவந்த கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.