சவுதி-அரேபிய எண்ணெய் கிணறுகள் உள்ள பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்!

சவுதி-அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் அதிகம் இருக்கும் கிழக்கு பகுதியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். மேலும், அந்தப் பகுதியில் பல கட்டங்கள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்ததாக சவுதி-அரேபிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமாம் நகரில் நிறுவப்பட்ட ஏவுகளைகளை திசை திருப்பும் பொறிமுறையால் இந்த ஏவுகணை தடுத்து நிறுத்தப்பட்டது. எனினும் ஏவுகணையில் இருந்து சிதறிய துண்டுகள் தாக்கியதில் இரு சிறுவர்கள் காயமடைந்ததாகவும், அப்பகுதியில் உள்ள 14 வீடுகளுக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக சவுதி-அரேபிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலை ஈரானைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)