யாழில் அதிக விலை, காலாவதியான பொருள் விற்பனை! 53 வர்த்தகர்களுக்கு வழக்கு

யாழ் மாவட்டத்தில் அதிக விலைக்கு பொருள் விற்றல் காலாவதியான பொருள் விற்றல் போன்ற குற்றச்சாட்டுகளில் கடந்த மூன்று வாரங்களாக 53 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினத்தில்(08) மட்டும் 8 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக நீதிமன்ற நடைமுறையில் சற்று தாமதம் காணப்படுகின்றது.

தொடர்ச்சியாக பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையினரால் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

எனவே வியாபாரிகள் மிகவும் விழிப்புணர்வுடன் பொதுமக்களுக்கு சகாய விலையில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் அதிக விலைக்கு விற்பனை செய்து பிடிபட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக சீனி அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான விற்பனை நிலையம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. நேற்றைய தினத்தில் இருந்து மிகவும் இறுக்கமான முறையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)