கொரோனாத் தொற்று சோதனைக் கருவி 1,500 ரூபாய்க்கு பேராதனை பல்கலை உற்பத்தி

கொரோனாத் தொற்றுநோயைக் கண்டறிய அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் உள்ளிட்ட குழு இடைநிலைத் தேர்வு முறையாகப் பயன்படுத்தக்கூடிய சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.

இவ் சோதனைக் கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லாமவன்ஸா மற்றும் மூத்த விரிவுரையாளர் ருசிகா பெர்னாண்டோ தலைமையிலான குழு இதனை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் அறிமுகப்படுத்தியது.

இது விரைவாகவும் மலிவாகவும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண உதவுகிறது.

இந்தச் சோதனைக் கருவியை தயாரிக்க சுமார் 1,500 ரூபாயே செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தொழில்நுட்பக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு பதிவுக்காகக் காத்திருக்கிறது.

இந்த சிறப்பு சோதனை கருவி “RT LAMP (Reverse Transcription Loop Mediated Isothermal Amplification)” க்கான தேசிய மற்றும் சர்வதேச காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)