இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் இன்று(09) மீண்டும் சில பயனர்களுக்கு செயலிழந்துள்ளது.
குறித்த சமூக வலைத்தளங்களானது சில பயனர்களுக்கு மட்டுமே செயலிழந்திருந்த நிலையில் 2 மணித்தியாளங்களின் பின்னர் இயல்பிற்கு திரும்பியுள்ளது.
ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியன செயலிழந்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை(04) உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியன ஏழு மணி நேரத்திற்கும் மேலாக செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






