ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று(13) ஆரம்பமாகி ஓக்டோபர் 8 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இம்முறை கூட்டத்தொடரில் காணொளி மூலம் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மோசமான மனித உரிமை நிலைமையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆழமாக ஆராய்வதுடன், உண்மையான முன்னேற்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கையை மௌனிக்கச் செய்யவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முஸ்லிம்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்துவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





