கொரோனாத் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று(12) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார்.
கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம்(11) இரவு உயிரிழந்தார்.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாண போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் நேற்றையதினம்(12) மேற்கொண்டார்.
சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிவழங்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





