பட்டதாரிகளின் பயிற்சி காலம் 6 மாதத்திற்கு மேல் நீடிக்கப்படாது – அரசாங்கம்

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை இது தொடர்பில் எந்த தீர்மானமும் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிப்பதற்கு தீர்மானிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)

பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்கத் திட்டம்!