2022ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளாா்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(30) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்துள்ளாா்.
அதற்கமைய, ஒக்டோபர் 04ஆம் திகதி திங்கட்கிழமை முழு நாளும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான விசேட நாடளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் இதுவரை நாடாளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்களுக்கான 40 கேள்விகளுக்காக முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 வரையான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






