நல்லூர் பிரதேச செயலாளர் சபைக்குள் வைத்து தாக்கப்பட்டார், தாக்கியவர் கைது

நல்லூர் பிரதேச சபை செயலாளர் சபைக்குள் வைத்து ஒருவரால் தாக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட சந்தை தொடர்பான குத்தகை விடையம் சம்பந்தமாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே நல்லூர் பிரதேச சபை செயலர், பிரதேச சபைக்குள் வைத்து சற்று முன்னர் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட செயலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொண்ட நபர் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.