பல்கலைக்கழக நுழைவு விண்ணப்ப படிவங்களில் விளையாட்டுத் துறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்குவதை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என குமார் சங்கக்காரா தெரிவித்தார்.
மாகாண மற்றும் பள்ளி விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. இதன் போதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
சுகதாச தேசிய விளையாட்டு வளாக ஆணையத்தினை துரிதமாக முழு அளவில் மறுசீரமைப்பு மேற்கொள் வேண்டும்.
மேலும், வில்வித்தை போன்ற மாஸ்டரிங் விளையாட்டு மற்றும் பள்ளி மட்டத்திலிருந்து ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லவதற்கான களங்கள் அமைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு விளையாட்டையும் தரவரிசைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மற்றும் சர்வதேச விளையாட்டுகளை இலக்காகக் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் தனது கருத்துக்களை முன்வைத்தார்.





