வலம்புரி பத்திரிகை பணியாளர் மீது அதிகாலை வாள்வெட்டு

வலம்புரிப் பத்திரிகையின் விநியோக பிரிவு பணியாளர் மீது இனம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை வாள்வெட்டு தாக்குதலு மைற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த பணியாளர் பத்திரிகை விநியோகிப்பதற்காக கந்தரோடை வீதியில் செல்லும் போது பின்னால் மோட்டார் சைக்கிளிலில் வந்த இனம்தெரியாத நபர்களால் வாள்வெட்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

கோன்டாவிலைச் சேர்ந்த 43 வயதான பலச்சந்திரன் மதனகரன் ஆகயவரே வாள்வெட்டிற்கு இலக்காகினார்.

வாள்வெட்டிற்கு இலக்கானவர் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுப்பியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.