பாலஸ்தீன வீதிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டது

இலங்கை தொடர்ந்தும் பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவளித்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் பாலஸ்தீனத்தின் ராமல்லா நகரில் உள்ள வீதிக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இத் தகவலை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் யூசுப் அல்- ஒத்தாய்மீன் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)