நாடு திறக்கப்பட்டாலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு கடுமையாக சுகாதார நடைமுறை

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவார் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு திறக்கப்பட்டதன் பின்னர், பொதுமக்கள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு கடுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமானது.

எதிர்வரும் பண்டிகை காலப் பகுதிகளில் மிகவும் அவதானத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் பொறுப்பின்றி செயற்படுகின்ற பட்சத்தில், கொரோனாத் தொற்று மீண்டும் பரவி, பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)