வடக்குமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பிரியாவிடை

இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பத்மசிறீ முனசிங்கவின் பிரியாவிடை நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன் போது பொலீசாரின் அணிவகுப்பு மரியாதை யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஏனைய மாவட்ட நீதிபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.