Laugfs, Litro இணைந்து புதிய எரிவாயு நிறுவனத்தை உருவாக்க முயற்சி!

Laugfs மற்றும் Litro நிறுவனங்கள் இணைந்து Siyolit எனும் பெயரில் புதிய சமையல் எரிவாயு நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

2019 ஜூன் மாதத்தில் உலக சந்தையில் காணப்பட்ட எரிவாயுவின் விலை மற்றும் டொலரின் விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது உள்ள நிர்ணய விலையினால் தமது நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக Litro Gas நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சந்தையில் Laugfs Gas-இற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக Laugfs மற்றும் Litro நிறுவனங்கள் இணைந்து Siyolit எனும் பெயரில் புதிய சமையல் எரிவாயு நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)