ஒக்.15 வரை மாகாணத் தடை? கடுமையான கட்டுப்பாடுகள்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்தை ஒக்டோபர் 15ஆம் திகதியளவிலேயே ஆரம்பிக்க தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது.

அத்துடன் நாடு திறக்கப்பட்டாலும் ஒன்றுகூடல்கள், பொது நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஒக்டோபர் 15ஆம் திகதிவரை தடைவிதிக்கப்படும் எனவும் தெரியவருகிறது.

எதிர்வரும் முதலாம் திகதி ஊரடங்கு தளர்த்திய பின்னர் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)