பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, விண்ணப்பித்துள்ள மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்காக இந்த வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 42,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





