அவசர சிகிச்சை பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள்

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு 83 பேர் இதுவரையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிகிச்சை மத்திய நிலையங்களில் 382 நோயாளர்கள் ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கொரோனா தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

நாட்டில் 275 கொரோனா சிகிச்சை நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)