சிறுபான்மைக்கு தீங்கு விளைவிக்காமல் பெரும்பான்மை செயற்படுவதே ஐனநாயகம் – மஹிந்த

சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்காமல் பெரும்பான்மையினரின் செயல்பாடுவதே உண்மையான ஜனநாயகம் என பிரதம விருந்தினராக தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜனநாயக தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அனுராதபுர தொழிற்பயிற்சி ஆணையத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் “ஒரு தொற்றுநோயின் கீழ் ஜனநாயகம்” என்ற தலைப்பின் கீழ் மகிந்த தேசப்பிரிய தனது கருத்துக்களை வெளியிட்டார்.