அரசியலமைப்பு சட்டவாக்க சபையின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்கள் நீடிப்பு!

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டவாக்க சபை, அந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக மேலும் மூன்று மாத காலஅவகாசம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகளைக் கடந்த செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

எனினும் அந்த பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், மேலும் மூன்று மாத காலம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)