இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று வருகை! கோட்டா, மஹிந்த, சம்பந்தனை சந்திக்கிறார்

இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று(02) இலங்கை வரவுள்ளார். இந் நிலையில் அவர் யாழ்ப்பாணம், திருகோணமலைக்கும் வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இன்று(02) இலங்கைவரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா ஒக்டோபர்(05) ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந் நிலையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நாளை (03) யாழ்ப்பாணத்துக்கு வருகைதருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசின் உதவியுடன் யாழ் நகரில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தை பார்வையிடும் நோக்குடன் யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தெரியவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)