அமுலில் உள்ள பல கட்டுப்பாடுகள் ஒக்.16ஆம் திகதியுடன் தளர்த்த எதிர்பார்ப்பு – இராணுவத் தளபதி

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுவார்களானால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும்,

தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 16ஆம் திகதியுடன் தளர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து செயற்படுவார்கள் என தான் நம்புவதாகவும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)