நாட்டில் நேற்றைய தினம்(01) கொரோனாத் தொற்றால் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13,000ஐ கடந்தது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 13,000ஐ கடந்தது!
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






