யாழில் பிறந்து 24 நாட்களேயான குழந்தை கொரோனாவால் மரணம்!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 24 நாட்களேயான குழந்தை கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குழந்தை மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு வெளிநோயாளர் பிரிவில் பரிசோதனை செய்தபோது குழந்தை உயிரிழந்துள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நீர்வேலியைச் சேர்ந்த பவிகரன் நிருஜா என்ற 24 நாட்களேயான பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)