
கொரோனா தொற்றுக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மரணம் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.
63 வயதான அம்பாறை மாவட்ட ஒலுவில் பிரதேசத்தினைச் சேர்ந்த குறித்த நபர், கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.





