உலக சந்தையில் பெற்றோலியத்தின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, டீசல் விலையை லீட்டருக்கு ரூ .25 ஆகவும், பெற்றோல் லீட்டருக்கு ரூ .15 ஆகவும் உயர்த்த வேண்டும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
எரிபொருள் விற்பனையால் நிறுவனம் நஷ்டம் அடைவதாக தெரிவித்து லங்கா ஐ.ஓ.சியின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ளார்.
எனினும், இந்த நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





