உலகளவில் வாராந்த கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,
உலகளவில் வாராந்த கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலகளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஓர் ஆண்டு காலமாக ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பாகும். இது பல்வேறு நாடுகள் பெறப்பட்ட கணக்காகும். ஆனால் இதை விட இறப்புகள் அதிகமாகக்கூட இருக்கலாம்.
கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தும் நாடுகளில் தொடர்ந்தும் இறப்பு அதிகமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி மிக முக்கியம் என டெட்ராஸ் அதானம் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





