மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் வீதியில் வைத்து இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர், இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி நேற்று(22) மாலை சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






