நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பு? – வெளியான தகவல்!

நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையினுடைய ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த போராட்டத்திற்குஆதரவாக 11 கட்சிகளின் தலைவர்கள் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)