யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்று அச்சத்தால் மூடப்பட்டிருந்த கடைகள் இன்றைய தினம் மீளத் திறக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் உறவினர்களின் நான்கு கடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் கடந்த சில தினங்களுக்கு முன் மூடப்பட்டிருந்து. இந் நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த கடைகளை திறப்பதற்கு சுகாதாரப் பகுதியினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த கடைகள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது





