பேஸ்புக் நிறுவனத்தின் புதிய பெயர் அறிவிக்கப்பட்டது!

உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர இணைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி உள்ளதாக அறிவித்தார்.

சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம். கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்தார். அதே சமயம் தங்கள் செயலிகள், பிராண்டுகளின் பெயர்களில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)