இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 11பேர் உயிரிழப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 27ம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த காலநிலை மாற்றத்தினால் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 7167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)