யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் தாமதமாக வரவும் – சத்தியமூர்த்தி

கனமழையின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

யாழில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்று வருகின்றன.

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள மழை குறைவடைந்த பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள்ளார்.

மேலும் சாதாரண சிகிச்சை பெறுவோர் தற்போதைய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து அசௌகரியங்களை எதிர்நோக்கவேண்டாமெனவுப் தெரிவித்துள்ளார்.

யாழ் நிருபர்

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)