அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக
மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
60 மருந்துகளினுடைய 131 வகைகளின் விலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குறித்த மருந்து வகைகளை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்வது சட்டவிரோதமானது என அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அறிவிக்க முடியும் என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஆர்.எம.எஸ்.கே. ரத்நாயக்க தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





